Thursday, February 13, 2020

அடுத்தவன் பிரச்சனை

தலித் ஒடுக்குமுறையை ஒரு மேல் ஜாதிக்காரன் பேசணும்
பெண் விடுதலையை ஒரு ஆண் பேசணும்
தொழிலாளி அடக்குமுறையை ஒரு முதலாளி பேசணும்
சிறுபான்மை அநீதியை பெரும்பான்மை சேர்ந்தவன் பேசணும்.

அவரவர் பிரச்னையை அவரவர் பேசவே இங்கு சுதந்திரமும் இல்ல, அங்கீகாரமும் இல்ல.

அப்படி மீறி பேசிட்டா போதும், சமூகம் நினைக்கிறது "பார்ரா திமிர"

- ஹப்கர்ம்

Monday, July 29, 2019

முடியாத ஆசை



வானோடு இணையலாம் என எண்ணி
தலை தூக்கி பார்க்கும் மலையை விட பரிதாபமானது

உன்னோடு ஓர் முறை கரம் கோக்கலாம் என நினைக்கும் நான் 

Monday, December 17, 2018

வள்ளுவன்

காமமும் கடவுளும்
ஒன்றென்று இரண்டடியில் தந்ததோ வள்ளுவர்.


ஐம்புலனில் கரைந்து இனிமை தருமென்று

ஒரு வேற்றுமை உண்டென்று உரத்தே சொன்னான்.
ஒன்று எட்டும் கனி ரசித்து புசித்தது
மற்றொன்று எட்டும் என நம்பும் கனி.

Tuesday, July 30, 2013

உணர்வுப் போராட்டம் - 2


தொடரும்......

பயணம் தொடங்கியது
சக வீர சிங்களனுடன்

மணல் பாதை தோறும்
சதை பிண்டங்கள்

மரண ஒலங்கள் காற்றில்
கரைந்து ஒலித்தன
என் கரு விழியெங்கும்
ரத்த வெள்ளம் வலிந்தோடியது

எனக்குத்தெரியும் போரின் மனுதர்மம்
மரணம் என்று..

ஆனால் நான் பார்த்து
மரணம் அல்ல

மனித மிருகத்தின் மறுபக்கம்

என் முன் இரண்டு சடலங்கள்

ஒன்று ஒயிரற்ற ஈழத்தமிழன் உடை களையப்பட்டு
மற்றொன்று உயிருள்ள சிங்களன் மனிதம் களையப்பட்டு

மனிதமும் மிருகமும் பிரித்து வைக்கும் கோடு

சமூகமும் மனசாட்சியும்
சமூகம் எனும் கோட்டை அரசாங்கம் அளித்தது
மனசாட்சியை பழிவாங்கும் உணர்வு அளித்தது

எஞ்சி நின்ற் மிருகம் எதையும் செய்யத்
துணிந்தது.....

                                                                   


Sunday, July 21, 2013

விடுதலை - 1





ஆணை வந்தது
தலையங்கம் காக்க
என் தலை கொடுக்க துணிந்தேன்

என் எண்ண ஒட்டம்
எத்தி வைத்தது ஏராளம்

திராவிடத்தின் கடைசி சொட்டாய்
அழிந்து ஒழூகி
என் தேசம் சூழ்ந்த விசப்பாம்பு

விலை கொடுக்கப்பட்ட
என் சுதந்திரத்துக்கு
களை எடுக்கப்பட வேண்டிய
கயவர்கள் ஏராளம்

அடுத்த தலைமுறை ஆட்கொள்ள
இந்த தலைமறையின் கடைசி
உயிர் பலி எண்ணுடையதாக வேண்டும்

ஆணையில் அசிடப்பட்டது
58 division mulkadu (rising point)

எனது சனநாயகதின்
ஒட்டு மொத்த வடிவம்
காகிதப் படிவமாய் என் கையில்

ஒரு நாள் பயணம்
அடைந்தேன் என் கூடாரம்
எனக்கான தருணமும் வந்தது
எல்லையற்ற மிரழ்ச்சி

                                                                     -தொடரும்

 

பிறந்தநாள் கவிதை



ஜனனம் அர்தப்படுகிறது
உனது மரணம் அடுத்தவர்களூக்கு கசக்கும்போது

Monday, July 15, 2013

கவிதை தொகுப்பு





நூலிழை இழைக்கப்பட்ட கவிதை புத்தகம் நீ
அடுத்த பக்க ஆவலை தவிர்ப்பதா
கடந்த பக்க செலுமையிலே கரைவதா
கரையில்லா கடல் நீ என்று தெரிந்தும்
பக்கம் பக்கமாய் பருக
நினைக்கும் என் அறிவீனத்தை நினைத்து நகைக்கிறேன்