நினைத்தால் தூரம் பாரமாகும்,
பாரம் தாங்க தோள் வேண்டும்,
தோளோடு எனக்கு துணை நடந்த தோழி நீ.
விட்டொழிக்க குறைகள் சில இருந்தாலும்
சுட்டெரிக்க பல ரணங்கள் கிடந்தாலும்
பட்டொளியாய் உன் புன்னகை போதும்
உன் அயராத நட்பு, எனக்கு மாறாத அரண்.
நான் விழும்போதெல்லாம் உன் அன்பின் கரம்.
செம்மண் மழையாய்
உன் ஜனனமும் நம் பயணமும் இரண்டற கலந்தது .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கர்ஜனை இல்லை என்றாலும் பிடரி மயிர் கொண்ட சிங்கப்பெண்தான் நீ என் தோழி


