தொடரும்......

பயணம் தொடங்கியது
சக வீர சிங்களனுடன்
மணல் பாதை தோறும்
சதை பிண்டங்கள்
மரண ஒலங்கள் காற்றில்
கரைந்து ஒலித்தன
என் கரு விழியெங்கும்
ரத்த வெள்ளம் வலிந்தோடியது
எனக்குத்தெரியும் போரின் மனுதர்மம்
மரணம் என்று..
ஆனால் நான் பார்த்து
மரணம் அல்ல
மனித மிருகத்தின் மறுபக்கம்
என் முன் இரண்டு சடலங்கள்
ஒன்று ஒயிரற்ற ஈழத்தமிழன் உடை களையப்பட்டு
மற்றொன்று உயிருள்ள சிங்களன் மனிதம் களையப்பட்டு
மனிதமும் மிருகமும் பிரித்து வைக்கும் கோடு
சமூகமும் மனசாட்சியும்
சமூகம் எனும் கோட்டை அரசாங்கம் அளித்தது
மனசாட்சியை பழிவாங்கும் உணர்வு அளித்தது
எஞ்சி நின்ற் மிருகம் எதையும் செய்யத்
துணிந்தது.....


